fbpx
Homeபிற செய்திகள்பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் ‘எவன்சா - 2026’ ஆடை கண்காட்சி

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் ‘எவன்சா – 2026’ ஆடை கண்காட்சி

கோவை பிஎஸ்ஜிஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் ஆடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை சார்பில் எவன்சா 2026 எனும் ஆடைக் கண்காட்சி மற்றும் கல்லூரி விழா, பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்றது.

12 அன்று நடைபெற்ற ஆடைக் கண்காட்சியில், B.Voc, சமூகக் கல்லூரி, B.Sc மற்றும் M.Sc ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆடைகள் 15 சுற்றுகளில் காட்சிப்படுத் தப்பட்டன.

நிகழ்ச்சியை ஜி.ஆர்.ஜி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி வரவேற்புரையுடன் தொடங்கி வைத்தார். மும்பை கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் குளோபல் பிசினஸ் டெவலப்மென்ட் தலைவர் ஸ்ரீ முருகன் தென்கொண்டார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

எவன்சா 2026 தொடர்பான அறிக்கையை ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு டீன் சாந்தி ராதாகிருஷ்ணன் வழங்கினார். துறைத் தலைவர் திவ்யா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, முதலாம் ஆண்டு மாணவிகளின், ‘குழந்தைகள் ஆடைக் காட்சி’, இரண்டாம் ஆண்டு மாணவிகளின் கருப்பொருள் ஆடைக் காட்சிகள் நடைபெற்றன.

காலை அமர்வுகளுக்கு அனுபமா மாரிமுத்து, வருண்யா தேவி, ராதா நந்தகி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். மூன்றாம் ஆண்டு மற்றும் பி.ஜி மாணவிகள் வழங்கிய கருப்பொருள் நிகழ்ச்சிகளின் பிற்பகல் அமர்விற்கு கவிதா (டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி) மற்றும் ஷில்பா சுதர்சன் (அனிகா பொட்டிக்) ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு கைவினை மன்றத் தலைவர் ரூபா மோகன்தாஸ் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளின் படைப்பாற்றலைப் பாராட்டினார்.

கல்லூரி முதல்வர் ஹாரத்தி வரவேற்புரையாற்றினார். வெற்றியா ளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துறைத் தலைவர் இந்துமதி நன்றி கூறினார்.

பிப்ரவரி 13 (நேற்று) அன்று நடைபெற்ற இந்த விழாவில், ட்ரேஷ் டு ட்ரெண்ட், பேஷன் போர்ஜ் போன்ற நேரடி நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. பிற கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஆடைக் கண்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

நிறைவு விழாவில், தி நெசவு கோயம்புத் தூரின் நிறுவனர் உமா பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக உதவிப் பேராசிரியர் யமுனாதேவி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img