fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவிலிருந்து 15.65 லட்சம் பேர் மலேசியா சுற்றுப்பயணம்

இந்தியாவிலிருந்து 15.65 லட்சம் பேர் மலேசியா சுற்றுப்பயணம்

மலேசியாவை சிறந்த சுற்றுலா இலக்காக மேம் படுத்தும் நோக்கில், டூரி சம் மலேசியா மற்றும் மலேசியா சுற்றுலா பயண முகவர்கள் சங்கத்துடன் இணைந்து சுற்றுலா பயண ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மலேசி யாவைச் சேர்ந்த 49 சுற்றுலா நிறுவனங்கள், கோவை மற்றும் கொங்குப் பகுதியில் உள்ள பல முக்கிய சுற்றுலா மற்றும் பயண வர்த்தக நிறுவனங் களும் கலந்து கொண்டன.

முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த டூரிசம் மலேசியா நிறுவனத்தின் தலைவர். டத்தோ மனோகரன் பெரியசாமி கூறியதாவது: இந்தியாவானது மலேசியாவின் முக்கிய சுற்றுலா சந்தைகளில் ஒன்றாகத் தொடர்ந்து திகழ்கிறது.

2025ஆம் ஆண்டில் 15,65,194 இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா சென்றுள்ளுதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டின் 13.65 லட்சம் வருகைகளுடன் ஒப்பிடுகையில் 145 சதவீத உயர்வைக் குறிக்கிறது.

‘விசிட் மலேசியா இயர் 2026 திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருந்து இவ்வரு டம் 21 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடு களுக்கிடையேயான வலு வான விமான இணைப்பும், பயண வளர்ச்சிக்கு துணை புரிகிறது. இந்தியாவின் 14 நகரங்களில் இருந்து வாரத்திற்கு 238 நேரடி விமான சேவை (47.399 இருக்கைகளுடன்) இயக்கப்படுகின்றன.

இதில், தென்னிந்தியாவிலிருந்து மட்டும் 151 வாராந்திர நேரடி விமான சேவை (29,541 இருக்கைகளுடன்) இயக்கப்படுவதால் தென்னிந்தியா, மலேசிய சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் முக்கிய பங் காற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் டூரிசம் மலேசியாவின் விற்பனை மேம்பாட்டு துறையின் மூத்த இயக்குநர் நுவால் ஃபாதிலாபிந்தி கு அஸ்மி, மலேசியா டூரிசம் சென்னை இயக்குனர் ஹிஷாமுதீன் முஸ்தபா மற் றும் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img