fbpx
Homeபிற செய்திகள்கோவை கல்ச்சுரல் அகாடமியின் 24வது ஆண்டு விழா

கோவை கல்ச்சுரல் அகாடமியின் 24வது ஆண்டு விழா

கோவை கல்ச்சுரல் அகாடமியின் 24-வது ஆண்டு விழா கோவை எஸ்.என்.ஆர் கலையரங்கத் தில் நடை பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல பின்னணிப் பாடகர் பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் ‘திருச்சிற்றம்பலம்‘ பட புகழ் இயக்குனர் மித்ரன் ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களை வரவேற்கும் விதமாக, கோயம்புத்தூர் கல்ச்சுரல் அகாடமியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.பி. நவீன்குமார் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

விழா சிறப்பம்சங்களாக விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

குழந்தைகளுடன் பாடகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் மித்ரன் ஜவகர் ஆகியோர் மேடை யில் சினிமா பாடல்களைப் பாடி, குழந்தைகளை உற்சா கப்படுத்தி மகிழ்வித்தனர்.


பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலைநிகழ்ச்சிகளில் திறமை களை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு, சிறப்பு விருந்தினர்கள் கைக ளால் கேடயங்கள் மற் றும் சான்றிதழ்கள் வழங்கப்பட் டன.

படிக்க வேண்டும்

spot_img