fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள் 737 பேருக்கு இலவச மடிக்கணினி

நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள் 737 பேருக்கு இலவச மடிக்கணினி

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு 737 விலை இல்லா மடிக்கணினிகளை கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் வழங்கினார்.

நிர்மலா மகளிர் கல்லூரியில் நேற்று தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் என்று திட்டத்தின் கீழ் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் அனை வருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு‌ நிர்மலா கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி. மேரி பபியோலா‌ தலைமையேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் , வெல்லும் தமிழ் பெண்கள், முதல் தலைமுறை பட்டதாரி திட்டம் போன்ற மாணவர்களுக்கு பயனளிக்கும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்துச் சிறப்பாக குறிப்பிடப்பட்டது.

இதில் கோவை மக்களவை உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார், டிஜிட்டல் உலகில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்வதற்கும், வேலைவாய்ப்பினைப் பெருக்கிக் கொள்வதற்கும் மிகப்பெரிய வாய்ப் பாக மடிக்கணினி உதவும் என்பதையும், தமிழக அரசு மாணவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்துகின்ற ஒவ்வொரு திட்டங்களையும் முறையினையும் எடுத்துரைத்து பின்னர் மாணவிகளுக்கு 737 விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் துணை முதல்வர் அருட்சகோதரி ஜாக்குலின் மேரி, விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் மாவட்ட அதிகாரியான முனைவர் ப.செல்வம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதில் பயனாளிகளாக பங்கேற்ற மாணவிகள் மடிக்கணினியைப் பெற்றுப் பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img