இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாடு, சமூக நீதியுடன் கூடிய பரவலான வளர்ச்சியை உறுதி செய்வதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்றும், அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை கொள் முதல் செய்ய 20 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும். என்றும் இதற்காக ஆண் டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஜவுளித் துறையின் வலுவான கட்ட மைப்பினை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும், ஜவுளித்துறையில் சர்வ தேச முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற் றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் முதலாவது சர்வதேச ஜவுளித்தொழில் மாநாடு 360 இன்று கோவையில் தொடங்கியது.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச ஜவுளித்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயி லாக தொடங்கி வைத்தார். கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச ஜவுளித் துறை மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றியனார்.
அப்போது அவர் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் ஆட்டோமொ பைல், ஐடி மற்றும் காலணி உற்பத்தி போன்ற துறைகளைப் போலவே ஜவுளித் துறையும் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஜவுளி வணிகம் குறிப் பாக, ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய ஏற்று மதியாளராகத் தமிழ்நாடு பெருமை பெற்றுள்ளது.

நாட்டின் ஒட்டு மொத்த ஜவுளி வணி கத்தில் மாநிலத்தின் பங்கு 33 சதவீதமாக உள்ளது. இத்துறை நேரடியாக 31 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதோடு, அதில் 60.12 சதவீதம் பெண் தொழிலாளர்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
துணியியல் துறை ஜவுளித் துறையின் முக்கி யத்துவத்தைக் கருத்தில் கொண்டு திராவிட மாடல் அரசு துணியியல் துறை என்ற தனித்துறையை உருவாக்கியுள்ளது. இத்து றையை உலகளாவிய நிலைக்குக் கொண்டு செல்ல அமைச்சர் காந்தி மற்றும் அதிகாரிகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய சந்தைகளைக் கண்டறிவது மற்றும் பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது.
20 சதவீத மூலதன மானியம் இந்திய – ஐரோப்பிய யூனியன் வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ள சூழலில், இந்த மாநாடு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த புதிய ஜவுளி கொள்கை 2025-2026 வெளியிடப்பட்டது. மேலும், பல்வேறு தரப்பின ரின் கோரிக்கையை ஏற்று, அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்தி ரங்களை கொள்முதல் செய்ய 20 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும்.
இதற்காக ஆண்டுதோ றும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்கனவே கோவை, மதுரை, தூத்துக்குடி மாநாடுகள் மூலம் 9,764 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலை யில், தற்போதைய மாநாட்டிலும் 915 கோடி ரூபாய் மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் முதலீடு செய்து பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்குமாறு சர்வதேச தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்து, மாநாடு வெற்றிபெறத் தனது வாழ்த்துகளுடன் உரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார்.
கோவையில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கைத் தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி.க்கள் கணபதி ராஜ்குமார். ஈஸ்வரசாமி, கலெக்டர் பவன்குமார். மேயர் ரங்க நாயகி ராமச்சந்திரன், மாநக ராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஜவுளித் தொழில்முனை வோர்களுக்கு சிறந்த ஏற்று மதியாளர் விருதுகளையும், நலத்திட்ட உதவிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இன்று தொடங்கிய மாநாடானது நாளை வரை 2 நாட்கள் நடக்கிறது. 2 நாள் நடைபெறும் மாநாட்டில் ஜவுளித்தொழிலுக்கென 100க் கும் மேற்பட்ட தனித்துவ கண்காட்சி, அழகு நயப்பு வாங்குவோர். விற்போர் சந்திப்பு கருத்தரங்கும் நடக்கிறது.
மேலும் விருதுநகர் பகுதியில் அமைய உள்ள பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்கா தொடர்பான விழிப்புணர்வுக்கான ரோடு ஷோவும் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் ஏராளமான ஜவுளி தொழில் முனைவோர்கள் கலந்து கொள்கின்றனர்.



