கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி சார்பில் 3 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது.
நீலகிரி மாவட்டம் கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில், எத்தி யோப்பியா நாட்டின் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் அதன் ஆலோசகரான கிருஷ்ணராஜ் ராம சாமி, காக்னிதோர்ஸ் செயற்கை நுண்ணறிவு நிறுவன நிறுவனர் சுபாஷினி வெங்கடாச்சலம், வில்லேஜ் டெக்னாலஜி ஆஃப் ஸ்கூல் சார்பாக பாலாஜி ஆகிய மூவருடன் கல்லூரியின் தலைவரும் கோவைத் திருமண்டலப் பேராயருமான பிரின்ஸ்கால்வின், மண்டலப் பொறுப்பாளர்கள் டேவிட் பர்ன பாஸ் மற்றும் அமிர்தம் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் கையெழுத்தாகின.
ஒப்பந்தங்கள் குறித்து சிஎஸ்ஐ ஆயர் பிரின்ஸ் கெல்வின் கூறிய தாவது: இந்த ஒப்பந்தங்களின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உலகளாவிய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, திட்டப்பணிகள் மற்றும் நிதி ஆதாரங்களில் ஒருங்கிணைந்து செயல்பட ஏதுவாகிறது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிமாற்றங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு ஒருங் கிணைந்து செயல்படுவதற்கும் மாணவர்களுக்கான உதவித் தொகையோடு கூடிய, களப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பணி களை ஒருங்கிணைப்பதற்கும் இருதரப்பினருக்கும் இடையே ஆர்வம் மற்றும் உடன்பாடுள்ள துறைகளில் இணைந்து செயல்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
காக்னிதோர்ஸ் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கான களப்பயிற்சி, சர்வதேச அளவிலான சான்றிதழ் பயிற்சிகள், வேலைவாய்ப்புகள், செயற்கை நுண் ணறிவு கூகுள் கிளவுட் பிளாட் ஃபார்ம்ஸ் போன்ற மேம்பட்ட படிப்புகளை பெற்றுக்கொள்ள உதவும்.
இந்த கல்லூரியிலேயே செயல்படுவதால் மற்ற கல்லூரிகளிலிருந்து வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பெற்றுக்கொள்ள உதவுகிறது.
வில்லேஜ் டெக்னாலஜி ஆப் ஸ்கூல் ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு டிரோன், ரோபோக்கள் உருவாக்குதல் மற்றும் இந்த தொழில்நுட்பங்களில் இம்மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்கு இக்கல்லூரியின் மூலமாக பயிற்சி அளிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
சமுதாய மேம்பாட்டிற்காக பல இளைஞர்களுக்கு கிராமப்புறங்களில் சான்றிதழோடு கூடிய பயிற்சிகள் கொடுப்பதோடு, இதன் செயல்பாடு ஒரு புரட்சியை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், கல்லூரியின் இயக்குனர் அருமைராஜ், தாளாளர் காட்வின் டேனியல் மற்றும் முதல்வர் மெர்சி சாந்தி பங்கேற்றனர்.



