fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்நிலை அலுவலர்களுக்கு மூன்று நாட்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கப்பட்டது. இப்பயிற்சியினை ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் மரு. க.வே.சு.குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அவர்தம் உரையில், இப்புத்தாக்கப் பயிற்சியில் பொது விநியோகத் திட்டம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கணினிமயமாக்குதல், அரசு திட்டங்கள், சட்டப்பூர்வ பணிகள், தகவல் அறியும் உரிமை சட்டம், நிதி வங்கியியல், நுகர்வோர் கூட்டுறவு விற்பனை, பாதுகாப்பு போன்ற பொருள் குறித்து விரிவாக பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பணியில் பயிற்சி, முயற்சி இவை இரண்டும் மிகவும் அவசியம். இப்பயிற்சியினை முறையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தலைமை வகித்து பணியாளர்கள் தங்கள் துறைசார்ந்த பணிகளை செயல்படுத்தும்போது கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு உறுதிதுணையாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியினை நன்கு பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் செல்வக்குமரன் நுகர்வோர் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் ஜி. காலிதா பானு, கோபி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் இரா.முத்துச்சிதம்பரம், ஈரோடு துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) சு.மாதேஷ், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் இரவிச்சந்திரன், ஈரோடு கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் குமாரிமோகனா, கோபிசெட்டிபாளையம் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் பரிமளா, துணைப்பதிவாளர்/மண்டல மேலாளர் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஈரோடு யாசோதா தேவி, துணைப்பதிவாளர் (பயிற்சி) மைதிலி மற்றும் சார்நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் வரவேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img