fbpx
Homeபிற செய்திகள்சமயசங்கிலி கிராமப் பகுதிகளில் பொங்கல் கரும்புகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேரில் ஆய்வு

சமயசங்கிலி கிராமப் பகுதிகளில் பொங்கல் கரும்புகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேரில் ஆய்வு

பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் கரும்புகள் வருடம் தோறும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சமயசங்கிலி கிராமத்திலும் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் கூட்டுறவுத் துறை மூலமாக கரும்புகளை கொள்முதல் செய்வதற்காக கரும்புகளின் தரம், உயரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி சமய சங்கிலி கிராமத்திற்கு வருகை தந்து கரும்புகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது கரும்பு விவசாயிகள், தாங்கள் பயிரிட்டுள்ள முழு கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அவற்றிற்கான உரிய கூலி தமிழக அரசு சார்பில் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆய்வின் போது கூட்டுறவுத்துறை அதிகாரிகள், குமாரபாளையம் வட்டாட்சியர், கரும்பு விவசாயிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img