கோவை மாவட்டம், நீலாம்பூர் முதலிபாளையம் பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வீரவருமன் சிலம்பாட்ட பயிற்சி பள்ளியின் சார்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில், 2025 என்ற வடிவிலிருந்து 2026 என்ற வடிவில் சுமார் 200 மாணவர்களை கொண்டு தீச்சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர்.

இந்த உலக சாதனை நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனை நிகழ்வின் பயிற்சியாளர் எஸ்.ராதா கிருஷ்ணன் அனைத்து மாணவர்களையும் சிறப்பாக வழிநடத்தி, முறையான பயிற்சி அளித்து, புத்தாண்டு தீச்சிலம்பாட்ட நிகழ்வை வெற்றிகரமாக கொண்டாடியுள்ளார்.
மேலும், இந்த உலக சாதனையில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் பாராட்டுதலுக்கு உரிய வர்களாக திகழ்கின்றனர்.



