fbpx
Homeபிற செய்திகள்ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சேவைக்கு பாராட்டு

ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சேவைக்கு பாராட்டு

இன்றைய இளம் தலைமுறையினர் தொழில்நுட்பத்தில் சிறப்படைந்து முன்னேறுவதற்கு இணையாக, ஊட கங்களில் ஈடுபாடு மிக்கவர்களாக இருக்கும் சூழலில் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட இளைய சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று சமீபகாலமாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா தலைமையில் நடைபெற்ற விழாவில் தொண்டாமுத்தூர் பகுதிக் காவல்துறை, தீயணைப்புத்துறையினர் மற்றும் ரோட்டரி கிளப் ஆகியோர் இணைந்து வாழ்த்தினர்.

செயலாற்றல் மிக்க இளமைப்பருவத்தில் கல்லூரி மாணவிகளின் சமூக அக்கறையை வளர்த்து வழிகாட்டுவ தால் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க முடியும் என்பதற்குச் சான்றாக, தொண்டாமுத்தூரைச் சுற்றிலும் உள்ள கிராமப் பகுதிக ளில் சாலைப் பாதுகாப்பு பொதுமக்களுக்கான மருத்துவ முகாம்கள், தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மூல மாக மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த னர்.
சமூக உணர்வோடு பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் மாணவிகள் செய்த நலப்பணிகளை முன்னதாகப் பலரும் பாராட் டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img