கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவன பல்நோக்கு அரங்கில் ‘விக்ஸித் பாரத் 2047’ என்ற இலக்கை நோக்கிய முன்னெடுப்பில் தமிழ்த்துறைச் சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
“விக்ஸித் பாரத்திற்கு அவசியமானது நகர வளர்ச்சியா? கிராம வளர்ச்சியா?” என்னும் தலைப்பில் ‘செந்தமிழ் திலகம்‘ பேராசிரியர் முனைவர் ச.குருஞானாம்பிகா நடுவராக, மாணவியர் கிராம வளர்ச்சியே என்ற தலைப்பில் காயத்ரி, சிவசெல்வி, வைஷ்ணவி, ஜீவிதா ஆகியோரும் நகர வளர்ச்சியே தலைப்பில் ஹர்ஷினி துர்கா, பவித்ரா, பிரியதர்ஷினி, சனோபியா ஆகியோரும் தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

“ஒவ்வொரு மாநிலத்திலும் கடைசி விவசாயி வரை என்று தலை நிமிர்ந்து நிற்கின்றார்களோ அன்றே நம் நாடு சிறந்த நாடாகப் போற்றப்படும். தூய்மையும் சுகாதாரமான வாழ்வியலும் ஆரோக்கியமும், கிராமங்களில் இருப்பது போல் நகரங்களிலும் பேணப்படுதல் வேண்டும். கல்வியிலும் மருத்துவத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் நகரத்தின் நுட்பங்கள் கிராமத்திற்குத் தேவை. அதேநேரம் கிராமத்தின் பழமையும் கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
கிராமங்களும் நகரங்களும் சமமாய் ஒரு நிலையில் வளர்ந்தால் தான் வளர்ந்த இந்தியாவைக் காண முடியும் என்னும் தீர்ப்போடு பட்டிமன்றம் நிறைவு பெற்றது.
பட்டிமன்ற நிகழ்வில் நோடல் ஆபிசர் முனைவர் ராதா மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி.பிரியதர்சினி, தமிழ்த்துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.அ. புஷ்பா மற்றும் மாணவியரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



