fbpx
Homeபிற செய்திகள்கரூர் சிஎஸ்ஐ ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

கரூர் சிஎஸ்ஐ ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை திருச்சி தஞ்சை திருமண் டலம் சார்பில் நூறு ஆண்டுகளை கடந்த சிஎஸ்ஐ ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கிறிஸ்துமஸ் திருவிருந்து வழிபாடு அதிகாலை வெகு சிறப்பாக கொண் டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின்விளக்கு களால் அலங்கரிக் கப்பட்டு காண்போரைக் கவர்ந்தது. சிஎஸ்ஐ ஹென்றி ஆயர் அருள்பணி ராஜமாணிக்கம் அருள் பணி சாமுவேல் ராஜா, சேகர் ஆயர் ஆகியோரின் கூட்டுசிறப்பு ஆராதனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறப்பினை பாடல்களாக பாடி அனைவரையும் பரவசப்படுத்தினர்.

இந்த கிறிஸ்துமஸ் விழாவில் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் தேவாலய பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

படிக்க வேண்டும்

spot_img