fbpx
Homeபிற செய்திகள்பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் செம்பருத்தி மகளிர் குழு அமைத்த நாட்டுக்கோழி பண்ணையை ஆய்வுசெய்த ஆட்சியர் பவன்குமார்

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் செம்பருத்தி மகளிர் குழு அமைத்த நாட்டுக்கோழி பண்ணையை ஆய்வுசெய்த ஆட்சியர் பவன்குமார்

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ரங்கநாதபுரம் கிராமத்தில் செம்பருத்தி மகளிர் குழுவைச் சேர்ந்த மகளிர் வாழ் வாதார பண்ணைத் திட்டத்தின் கீழ் தலா ரூ.14000 மதிப்பீட்டில் 100 கோழிக்குஞ்சுகள் கொண்ட கோழிப்பண்ணை அமைத்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர்கள் பயணத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இச்செய்தியாளர் பயணத்தின் போது வட்டார இயக்க மேலாளர் குமுதா, உதவி திட்ட அலுவலர் அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது பண்ணை, பண்ணை சாரா, விற்பனை நிதிக்கடன் வழங்குதல், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் போன்ற பன்முகத் தன்மையுடைய பணிகள் ஆற்றி வருகிறது.

மேற்கண்ட சேவைகளின் ஒரு பகுதியாக வாழ்வாதார பண்ணைத் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 2021-2022 ஆண்டு பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, சூலூர், சுல்தான்பேட்டை மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய ஐந்து வட்டாரங்களில் ஒரு பயனாளிக்கு ரூ.9,000 வீதம் 229 பயனாளிகளுக்கு ரூ.20.61 இலட்சமும், 2022-23ம் ஆண்டு ஆனைமலை மற்றும் மதுக்கரை ஆகிய இரண்டு வட் டாரங்களில் ரூ9,000 வீதம் 280 பயனாளிகளுக்கு மொத் தம் ரூ.25.20 இலட்சமும், 2024-25ம் ஆண்டு அன்னூர் மற்றும் காரமடை ஆகிய இரண்டு வட்டாரங்களில் ஒரு தொகுப்பிற்கு ரூ.3 இலட்சமும் வீதம் இரண்டு தொகுப்பிற்கு ரூ.6 இலட்சம் நிதியுதவி வழங் கப்பட்டு 40 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
2025-26-ம் ஆண்டு சர்க்கார்சாமகுளம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இரண்டு வட்டாரங்களில் ஒரு தொகுப்பிற்கு ரூ.3 இலட்சம் வீதம் இரண்டு தொகுப்பிற்கு ரூ.6 இலட்சம் நிதியுதவி வழங் கப்பட்டு 40 பயனாளிகளும் பயனடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வாழ்வாதார பண்ணைத் திட்டத்தின் கீழ்; வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் 589 பயனாளிகளுக்கு கோழிபண்ணைகள் அமைக்க ரூ.57.81 இலட்சம் மதிப்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இப்பயனாளிகள் அந்நிதியினை பயன்படுத்தி கோழிக்குஞ்சுகள், கூண்டுகள், கோழித் தீவனங்கள் போன்றவற்றினை கொள்முதல் செய்து கோழி வளர்த்து வருகின்றனர்.
பொதுவாக பிராய்லர் கோழி கள் பயன்படுத்தப்பட்டு வரும் இக்காலத்தினில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நாட்டு இரக கோழிக் குஞ்சுகள் கொள்முதல் செய்து வளர்த்துவருவது என்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. நாட்டுக் கோழி ரக கோழிகளுக்கு சந்தையில் நல்ல விலையும் கிடைத்து வருகிறது.

அதனடிப்படையில் கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சி, ரங்கநாதபுரம் கிராமத்தில் செம்பருத்தி மகளிர் குழுவைச் சேர்ந்த பத்திரம்மாள், லட்சுமி, புஷ்பா ஆகியோர் வாழ்வாதார பண்ணைத் திட்டத்தின் கீழ் தலா ரூ.14000 மதிப்பீட்டில் 100 கோழிக்குஞ்சுகள் கொண்ட கோழிப்பண்ணை அமைத்துள் ளதை நேரில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.
கோழியின் புரதம் பற்றியும் அதன் நாட்டு ரக உற்பத்தி அதற்கு மதிப்புக் கூட்டு பொருட்கள் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் பற்றியும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


நாட்டு கோழி வளர்ப்பின் மூலம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை ஊக்குவித்து அவர்களுக்கு நல்லதொரு வருமானம் கிடைப்பதால் அவர்க ளின் வாழ்வாதாரம் உயர்ந் துள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட் சித்தலைவர் பவன்குமார் க.கிரி யப்பனவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி இலட்சுமி தெரிவித்ததாவது: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், நாயக்கன்பாளையம் ஊராட்சி, ரங்கநாதபுரம் கிராமத்தில் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுவில் இருக்கிறேன். எங்கள் குழுவில் உள்ள 20 மகளிருக்கும் ரூ.9000 மதிப்பீட்டில் தலா 100 கோழிக்குஞ்சுகளும், ரூ.5000 மதிப்பீட்டில் கோழிக் கூண்டு மற்றும் தீவனங்களும் வழங்கப்பட்டது.
தற்போது நாட்டு கோழி களுக்கு சந்தையில் நல்ல விலை இருப்பதால், எங்களுக்கு கூடுதலாக வருமான கிடைத்து வருகின்றது. இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.


இதுபோன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img