தேனி -அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர் வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 4-வது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளு மன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ஆகி யோர் முன்னிலையில் தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளையும், பல்வேறு துறைகளின் அமைக்கப்பட் டிருந்த கருத்துக் கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.
இந்தப் புத்தகத் திரு விழா வருகிற 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
புத்தக் திருவிழா நடை பெறவுள்ள 8 நாட்களும் மாலை நேரத்தில் பல்வேறு எழுத்தாளர்கள், பேச்சாளர்க ளின் சிந்தனைமிக்க இலக்கிய அரங்கம் நடைபெறவுள்ளது.
இன்றைய இளைய தலை முறையினர் வாழ்க்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளது. இப்புத்தகத் திருவிழா சமுதாய வளர்ச்சிக்காக உரு வாக்கப்பட்ட அருமையான முயற்சியாகும். இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான புத் தகங்களை தேர்ந்தெடுத்து வாங்கி படித்து வாழ்வில் முன் னேற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில், அதிக அளவு புத் தகங்களை வாசிப்பதன் மூலம் அதிக அளவு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்கள் மட்டு மல்லாமல், பிற அறிவு சார்ந்த புத்தகங்களையும் படிப்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்புத்தகத் திருவிழாவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான புத்தகங் கள் இக்கண்காட்சி இடம் பெற்றுள்ளது.
நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மின்னணு புத்தகங்கள் வரப்பெற்றாலும் அனைவருக்கும் அதனை பயன்படுத்த முடிவதில்லை. எனவே, இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி புத்தக வாசிப்பை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய மாண வர்கள்தான் எதிர்கால இந் தியாவின் வளர்ச்சியாக கரு தப்படுகிறார்கள். எனவே, மாணவ, மாணவிகள், இளை ஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் உங்களுடைய தேடலுக்கான சிறந்த புத்தகங்களை அதிக அளவில் வாங்கி படித்து, அறிவுத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும், என கேட்டுக் கொண்டார்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜ குமார், தேனி -அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணு பிரியா பாலமுருகன், துணைத்தலைவர் செல்வம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் முகமதுஅலி ஜின்னா (கணக்குகள்), உதவி இயக்குநர் அண்ணாதுரை (தணிக்கை), முதன்மைக் கல்வி அலுவலர் நாகேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, நகராட்சி ஆணை யாளர் செல்வி பார்கவி, நாடார் சரஸ்வதி பள்ளி நிர்வாக செயலாளர் ஆனந்தவேல் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த புத்தகக் கண்காட் சியை பள்ளி மாணவ, மாண விகளும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.



