செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், பெருமாட்டு நல்லூர் ஊராட்சியில் 110/11 கிலோ வாட் துணை மின் நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் உதயா கருணாகரன், கூடுவாஞ்சேரி நகர்மன்றத் தலைவர் கார்த்திக் தண்டபாணி, காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கே.பி. ராஜன், வட்டாட்சியர் பூங்கொடி, பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பகவதி நாகராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



