fbpx
Homeபிற செய்திகள்பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு பலன் முறையாக கிடைப்பதில் சிக்கல்- நாடாளுமன்றத்தில் பொள்ளாச்சி ஈஸ்வரசாமி கேள்வி

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு பலன் முறையாக கிடைப்பதில் சிக்கல்- நாடாளுமன்றத்தில் பொள்ளாச்சி ஈஸ்வரசாமி கேள்வி

புதுடில்லியில் நடைபெற்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொலைத்தொடர்பு வசதியில் ஏற்படும் பிரச்சனையால் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பலன் முறையாக கிடைப்பதில்லை என எழுந்த கோரிக்கை குறித்து பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது, விவசாயிகளுக்கு குறைந்தபட்ட வருமானமாக ஆண்டுக்கு ரூ.6,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டமாகும். இந்த நிதி ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ரூ.2,000 என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு KYC இணைக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பின்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தொலைதூர விவசாயிகளுக்கும், தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத கடைக்கோடி கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும் தொலைத்தொடர் புகள் சரியாக கிடைக்காத நிலையில் அவர்களுக்கு சேர வேண்டிய பிஎம் கிசான் நிதியுதவி கிடைப்பதற்கு ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் மோசமான இணைய தொழில்நுட்பம் மற்றும் இணைய பயன்பாட்டின் மூலம் இணையவழி KYC சரிபார்ப்பு மேற்கொள்வதில் சிரமமும், மேலும் ஆவணங்கள் சரிபார்ப்பில் ஏற்படும் தாமதமும் விவசாயிகளை சோர்வடைய செய்துள்ளது.

இதுபோன்ற சீரற்ற செயல்பாடுகளால் இத்திட்டத்தின் பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img