கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், நேற்று பேரூர் உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நேரில் வருடாந்திர ஆய்வு செய்தார்.
ஆய்வின் ஒரு பகுதியாக, உட்கோட்ட அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
இந்த ஆய்வின் போது அலுவலக செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி, சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ள தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதில் பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் மற்றும் பேரூர் உட்கோட்டை காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.



