fbpx
Homeபிற செய்திகள்இணையதளத்தில் பதிவேற்றம் செய்த வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சரிபார்க்கும் பணி - கலெக்டர் ஆய்வு

இணையதளத்தில் பதிவேற்றம் செய்த வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சரிபார்க்கும் பணி – கலெக்டர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சரி பார்க்கும் பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான அவகாசம் நேற்று முன் தினத்துடன் முடிந்த நிலையில், தற்போது கூடுதலாக 3 நாட்கள் காலஅவகாசம் அளித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குறிஞ்சிப் பாடி, பண்ருட்டி ஆகிய தாலுகா அலுவலகங்கள், கடலூர் மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறும்,தேர்தல் இணை யதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வாக்காளர் கணக் கெடுப்பு படிவங்களை சரி பார்க்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தன்னார்வலர்கள், அரசுப் பணியாளர்கள் மூலம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளாகதேர்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படிவங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காகதேர்தல் ஆணையத்தால் நீட்டிப்பு செய்யப்பட்ட நாளைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) முடித்திட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின் போது தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரகுமான்,கடலூர் கோட்டாட்சியர் சுந்தரராஜன், தாசில்தார்கள் பண்ருட்டி பிரகாஷ், கடலூர் மகேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img