fbpx
Homeபிற செய்திகள்இந்திய மருத்துவ உயிர்வேதியலாளர் சங்கத்தின் 32வது ஆண்டு தேசிய மாநாடு

இந்திய மருத்துவ உயிர்வேதியலாளர் சங்கத்தின் 32வது ஆண்டு தேசிய மாநாடு

இந்திய மருத்துவ உயிர்வேதியலாளர் சங்கத்தின் (AMBI) 32வது ஆண்டு தேசிய மாநாடு தமிழ்நாடு கிளையால், கோயம்புத்தூரிலுள்ள பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பி.எஸ்.ஜி அரங்கில் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இம்மாநாட்டை தமிழ்நாடு கிளை நடத்துவதில் பெருமைப்படுகிறது.

இந்த ஆண்டின் மாநாடு, நாடு முழுவதும் இருந்து 900க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சாதனையைப் பெற்றுள்ளது.

இவை புதுமையான மருத்துவக் கல்வி கருவிகள், நல்ல ஆய்வக நடைமுறைகள் (GLP), மேம்பட்ட பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள், சிம்யுலேஷன் பயிற்சிகள் உள்ளிட்ட பரந்த பரிமாணங்களில் கைப்பயிற்சி வழங்குகின்றன.

குறிப்பிடத்தக்க ஆறு AMBI உரைகள் வழங்கப்படுகின்றன. மேலும் 60-க்கும் மேற்பட்ட அழைக்கப்பட்ட பேச்சாளர்கள், 450-க்கும் அதிகமான ஆராய்ச்சி சமர்ப்பிப்புகள் ஆகியவை இந்த அறிவியல் நிகழ்ச்சியை வளப்படுத்துகின்றன.

என்.ஜி.எஸ், மாஸ் ஸ்பெக்ட்ரோமேட்ரி, மெட்டபோலோமிக்ஸ், ஆய்வக மேலாண்மை, மருத்துவக் கல்வி போன்ற தலைப்புகளில் அடுத்த தலைமுறை சிறப்பு அமர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதிக தாக்கம் கொண்ட 5 நிமிட ஸ்பாட்லைட் பேச்சுகளும் இடம்பெறுகின்றன.

தேசிய வினாடி வினா, எஸ்கேப் ரூம் சவால், கேரியர் பாதை மன்றம் போன்ற பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வைஸ்-சான்சலர் தலைமை விருந்தினராக மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

படிக்க வேண்டும்

spot_img