கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஏற்பாட்டில், மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அதன் தலைவர் பிரனேஷ் தலைமையில் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் டாக்டர் சி.மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் டாக்டர் அனுஷா ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்.



