fbpx
Homeபிற செய்திகள்ஜியோ ஹாட் ஸ்டார், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜியோ ஹாட் ஸ்டார், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜியோ ஹாட் ஸ்டார் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் தமிழ்நாடு துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்மபூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மோகன்லால், நாகார் ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
ஜியோ ஹாட் ஸ்டார்-ன் SVOD மற்றும் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீ ராம் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் தெற்கு பொழுது போக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இந்த ஒப் பந்தம் கையெழுத்தானது.
இந்த சர்வதேச முதலீட்டு வளர்ச்சியை ஊக்கு விப்பதோடு, வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டாரி-ன் தென்னிந்திய பொழுது போக்கு பிரிவிற்கான 25 புதிய தலைப்புகள் வெளியிடப் பட்டன. இதில் பிரபல தொடர்களின் புதிய சீசன்கள், ஒரிஜினல் கதைகள், பெரும் நட்சத்திரங்கள் கொண்ட தயாரிப்புகள், ரியாலிட்டி ஷோக்கள் என பல நிகழ்ச்சிகள் இடம் பெறும். கேரளா கிரைம் ஃபைல்ஸ் S3, சேவ் தி டைகர்ஸ் S3, குட் வைஃப் S2 போன்ற பிரபல தொடர்கள் 2026 ஜியோ ஹாட் ஸ்டாரில் சிறப்பாக வரவிருக்கின்றன.
இதில் “இனி இந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் அந்தந்தமொழி அடிப்படையில் இல்லாமல், இந்திய படங்களாக வெளியாகும்.

காந்தாரா, த்ரிஷ்யம், போன்ற படங்கள் அதற்கு சான்று,” என கமல் ஹாசன் உரையாற்றினார். “தெற்கு என்றுமே படைப் பாற்றல் மையம்,” என கிருஷ்ணன் குட்டியும் குறிப்பிட்டார். மோகன் லால், நாகார்ஜுனா, தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை ஒரே தளத்தில் கொண்டு வரும் இந்த முயற்சி இந்திய பொழுதுபோக்கை மறு வரையறை செய்யும் என ஜியோ ஹாட் ஸ்டார் நம் பிக்கை தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img