சென்னையைச் சேர்ந்த சிம்ஸ் மருத்துவமனை, இருதயத்தின் இடது கீழறையில் வளர்ந்திருந்த கட்டியை அகற்றுவதற்கு, மார்பெலும்பைப் பிளக்க வேண்டிய அவசியமின்றி, இந்தியாவிலேயே முதல்முறையாக எண்டோஸ்கோப்பி முறையிலான நுண்துளை அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது.
45 வயதான பெண் ஒருவரின் இருதயத்தில், இரத்தத்தை உந்தித் தள்ளும் பிரதான அறையின் உட்புறத்தில் வளர்ந்திருந்த மிக அரிதான கட்டியை அகற்ற இந்த நவீன சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நோயாளிக்கு பக்கவாதம் போன்ற சிக்கல்கள் ஏற்படும் அபாயம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
சிம்ஸ் மருத்துவமனையின் இருதய மற்றும் மேம்பட்ட பெருந்தமனி சிகிச்சைப்பிரிவின் இயக்குனரும் முதுநிலை ஆலோசகருமான டாக்டர் M.M. பாஷி வழிகாட்டுதலின்படி, இருதய மார்பறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. முகமது இப்ராஹிம் தலைமையிலான குழுவினர் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டனர்.
இந்தச் சிகிச்சையின் வெற்றிக்கு சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து, வரலாற்று சிறப்புமிக்க இந்த சாதனைக்காக மருத்துவர்கள் குழுவை பாராட்டினார்.



