பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் டி.பி.கே நிறுவனம் சமீபத்தில் மூலதனம் மற்றும் வணிக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதன் மூலம், டி.எஸ்.எப் குழுமத்தின் ஒரு நிறுவனமான பிரேக்ஸ் இந்தியா, டி.பி.கே நிறுவனத்தில் முதன்மை மூலதன முதலீட்டின் மூலம் 10 சதவீத பங்குகளைப் பெறுகிறது. இந்த முதலீடு இரு நிறுவனங்களுக்கும் முக்கியமான முன்னேற்றமாகும். இது வர்த்தக வாகன பிரேக்கிங் துறையில் இரு நிறுவனங்களின் பலங்களை பயன் படுத்தி, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு மேம்பட்ட மதிப்பை உருவாக்க வழிவகுக்கிறது.
எம்&ஹெச்.சி.வி பிரிவில் முன்னணி உலகளாவிய ஆட்டோ உதிரி பாக உற்பத்தியாளராக உள்ள டி.பி.கே, பிரேக்குகள், பம்புகள் மற்றும் என்ஜின் சார்ந்த உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்றது. இந்த ஒப்பந்தம் இரு நிறுவனங்களும் ஒருவரின் பலத்தை ஒருவர் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.
இது ஒத்துப்போகும் புவியியல் சந்தைகளுக்கு அணுகலை வழங்குவதுடன், புதிய வாடிக் கையாளர்களை இணைத்துக் கொள்ளவும், புதிய விநியோகச் சங்கிலிகளை ஆராயவும் உதவுகிறது. இந்த கூட்டாண்மை, பிரேக்ஸ் இந்தியாவின் தற்போதைய ஹைட்ராலிக் மற்றும் நியூமேட்டிக் தயாரிப்புகளை புதிய ஏற்றுமதி சந்தைகளில் அறிமுகப்படுத்துகிறது.
மேலும், டி.பி.கே நிறு வனத்தின் கூடுதல் தயாரிப்பு வரிசையை இந்திய உள்நாட்டு சந்தைக்கு விரிவாக்கும் வாய்ப்பையும் திறக்கிறது.
டி.பி.கே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கௌரு ஒகடா கூறுகையில், “இந்த கூட்டாண்மையின் மூலம், இரு நிறுவனங்களும் தங்களுடைய தொழில்நுட்ப வலிமைகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதாரங்களை முழுமையாக ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்து தங்களது சந்தைகளுக்கான உயர்தர மதிப்பு சேர்க்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை இணைந்து உருவாக்குவோம்,” என கூறினார்.
பிரேக்ஸ் இந்தியா மேலாண்மை இயக்குநர் ஸ்ரீராம் விஜய் கூறுகையில், “இந்த முக்கிய முன்னேற்றம் டி.பி.கே-வுடன் நீண்ட கால உறவின் தொடக்கமாகும்.
இது மூலதன மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது” என்றார்.



