‘ஆப்டர்நூன்’ மற்றும் ‘பிற்பகல்’ நாளிதழ்களின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரான எம்.என்.சுதன் அப்பாதுரை மறைவையொட்டி, கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சரும், திமுக மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி மலரஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உடன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன், மாவட்ட திமுக துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், வார்டு செயலாளர் போஸ் மற்றும் மறைந்த சுதன் அப்பாதுரையின் துணைவியார் ஹெலன் சுதன், மகன்கள் ஆடம் அப்பாதுரை, டேவிட் அப்பாதுரை, மகள்கள் டாக்டர் கிரேஸ் தனசிங், டாக்டர் சுகிர்தா மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.



