fbpx
Homeபிற செய்திகள்கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் புனித சவேரியார் ஆலய தேர்த் திருவிழா

கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் புனித சவேரியார் ஆலய தேர்த் திருவிழா

கோவை சவுரிபாளையத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தேர்த் திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 30ந்தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தினமும் திருப்பலியும், நவநாளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.


இதைத் தொடர்ந்து, கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு பாடல் திருப்பலியும், அதில் புதுநன்மையும், உறுதி பூசதலும் நடைபெற்றது.


மாலையில் ஆடம்பர தேர் பவனியானது ஆலயத்தில் இருந்து, நல்லாயன் கிறித்துவ கல்லூரி பேராசிரியர் அருட்தந்தை ஆல்பட் தேரை மந்திரித்து தேர்பவனியை துவக்கி வைத்தார். தேர் கல்லறை வீதி, இரட்சகர் புரம், தேர்வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.


இதில், பங்கு தந்தை ஜார்ஜ் ரொசாரியோ, உதவி பங்கு தந்தை அருள் இருதயராஜ் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img