fbpx
Homeபிற செய்திகள்முன்னாள் எம்.பி. இரா.மோகன் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி: நா.கார்த்திக் மலர் தூவி மரியாதை

முன்னாள் எம்.பி. இரா.மோகன் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி: நா.கார்த்திக் மலர் தூவி மரியாதை

1980 ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும், 1989 ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்து, பொதுமக்களின் அன்பு, நன்மதிப்பைப் பெற்றவர் இரா.மோகன். முன்னாள் முதல்வர் கலைஞரின் பேரன்பைப் பெற்றவர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நன்மதிப் பைப் பெற்றவர்.

கோவைக்கு வரும் போதெல்லாம், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இரா.மோகனை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் பார்த்து ஆறுதல் கூறி வந்தார்.

கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகப் பணியாற்றியவர். நெருக்கடி காலத்தில் மிசா கைதியாக ஓராண்டு காலம் சிறை வாசம் இருந்தவர்.கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று, கழகத்திற்காக வும், நாட்டுமக்களுக்காகவும் கொள்கை உறுதி மிக்கவராகச் செயல்பட்டார்.

கழகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப் பணித்துக் கொண்டு பணி யாற்றி வந்த கோவை நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர்.

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளான இன்று (10ம் தேதி) காலை, பீளமேடு அண்ணா நகர் திமுக அலுவலகத்தில், இரா.மோகன் உருவப்படத்திற்கு மாநில தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) மலர் தூவி மரியாதை செய்தார்.

பொதுக்குழு உறுப்பி னர் மணிகண்டன், கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52வது வட்ட கழக செயலாளர் நாராயணசாமி, கோனியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் லட்சுமணன், 52வது வட்ட கழக நிர் வாகிகள் ஹட்கோ காலனி ஆட்டோ வாசு, மாணிக்கம், க்ரீன், சிஜிசி நடராஜ் சுந்தர்ராஜ், சுப்ரமணியம், பாலச்சந்திரன், பொன்னு சாமி, தொண்டரணி ஜவகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img