ஈரோட்டில் தி இந்தியன் பப்ளிக் பள்ளி சார்பில் மண்வளம் காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் நடை பெற்றது.
மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்தில் நடைபெற்ற மாரத்தானில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை பள்ளியின் துணை முதல்வர் பூனம் சிங், நிர்வாக இயக்குனர் மகேஸ்வரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பள்ளி முதல்வர் அத்துல் ரூன் தாலா பரிசுகள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.



