செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தையூர் ஊராட்சியில் டிட்வா புயல் பாதிப்பினால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் மோட்டார் மூலம் வெள்ள நீர் அகற்றிடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ள நீர் அகற்றிடும் பணிகளை துரிதமாக முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, படூர் ஊராட்சியில் டிட்வா புயல் காரணமாக மழைநீர் செல்லும் கால்வாய்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வெள்ள நீர் அகற்றும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், கண்டிகை பேரூராட்சி, வண்டலூர்& கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் டிட்வா புயல் காரண மாக தேங்கியுள்ள மழை நீரை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், போக்குவரத்து சீராக மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, திருக்க ழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம் முத்தமிழ் அரங்கம் சமுதாயக் கூடத்தில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அமைக்கப்பட்டிருந்த முகா மினை பார்வையிட்டு ஆய்வுமேற் கொண்டார்.
இம்முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கவும், மற்றும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக வழங்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
தொடர்ந்து, வாயலூர் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருந்த முகாமில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். மேலும், அங்கு தங்கியுள்ளவர்களிடம் முகாமில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வு நிகழ்ச்சிகளின் போது, திருப்போரூர் ஒன்றியக் குழுத்தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், வட்டாட்சியர்கள் சரவணன், வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவ கலைசெல்வன், பூமகள் தேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தையூர் எஸ். குமரவேல், படூர் தாரா சுதாகர், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



