fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பொறியியல் கல்லூரிக்கு ரூ.54 லட்சம் மானியம்

கொங்கு பொறியியல் கல்லூரிக்கு ரூ.54 லட்சம் மானியம்

கொங்கு பொறியியல் கல்லூரியின் மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் துறையின் முதுநிலை இணை பேராசிரியர் முனைவர் கே.கோமதி, “உணவுத் தொழில்களில் பயன்படுத்தப்படும் குளிரூட்டல் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளில் ஹைட்ரோஃப்ளூரோ கார்பன் குளிரூட்டிக்கு மாற்றாக இயற்கை கார்பன் டை ஆக்ஸைடை கொண்டு வடிவமைத்தல்” என்கிற தலைப்பிலான திட்டத்திற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) வழங்கும் பல்க லைக்கழக ஆராய்ச்சி பூங்கா திட்டத்தின் கீழ் 27 லட்சம் ரூபாய் மற்றும் கோவை ப்ரீஸ்டன் டெக்னலாஜிஸ் நிறுவனத்திடமிருந்து 27 லட்சம் ரூபாய் என மொத் தம் ரூ 54 லட்சம் மானியம் பெற்றுள்ளார்.


இந்த மானியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், நவம்பர் 25, 2025 அன்று கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நடை பெற்ற “டி என் ரைசிங் “ நிகழ்வின் போது வழங்கி னார். இந்த திட்டம் ப்ரீஸ் டன் டெக்னலாஜிஸ், கோயம் புத்தூர் நிறுவனத்துடன் இணைந்து நடைபெறும் தொழில் சார்ந்தஆராய்ச்சி திட்டமாகும். கல்லூரி தாளாளர் இ.ஆர். கே.கிருஷ்ணன் மற்றும் முதல்வர் ஆர்.பரமேஸ் வரன் ஆகியோர் கல்லூ ரிக்கு பெருமை சேர்த்த முனைவர். கே.கோமதியை பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img