fbpx
Homeபிற செய்திகள்காவேரி மருத்துவமனையின் காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையம் துவக்கம்

காவேரி மருத்துவமனையின் காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையம் துவக்கம்

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை தனது அதிநவீன ‘காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை’ தொடங்கியுள்ளது. இது, உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கோளா றுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த, பல்துறை அணுகுமுறையுடன் தீர்வுகாண்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழுமையான மையமாகும்.

நீரிழிவு தடுப்பு மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊக்குவிக்கும் மருத்துவ மனையின் வருடாந்திர பொது விழிப் புணர்வு முயற்சியான ‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’-ன் 7வது பதிப்பின் போது இந்த தொடக்க விழா நடைபெற்றது.

காவேரி ‘மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான டாக்டர். ஐசரி K. கணேஷ் தொடங்கி வைத்துப் பேசுகையில், “வாழ்க்கை முறை நோய்கள் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில், ‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ்’ போன்ற திட்டங்கள் விழிப்புணர்வு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளிலிருந்தே ஆரோக்கியம் தொடங்குகிறது என்ற செய் தியை தருகிறது” என்றார்.

ஐ.சி.எம்.ஆர் தரவுகளின்படி, இந்தியா வில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக் கள் நீரிழிவு நோயுடனும், கிட்டத்தட்ட 135 மில்லியன் மக்கள் உடல் பருமனுடனும் வாழ்ந்து வருகின்றனர். இது, வளர்சிதை மாற்ற நலனில் கவனம் செலுத்தும் ஒருங் கிணைந்த பராமரிப்புக்கான வலுவான தேவையை உணர்த்துகிறது.

புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த மையம், நீரிழிவு மருத்துவம், நாளமில்லாச் சுரப்பியல், ஊட்டச்சத்து, பிசியோதெரபி, உளவியல் மற்றும் வாழ்க்கை முறை மருத்துவம் ஆகிய துறைகளின் நிபுணர்களை ஒன்றி ணைத்து முன்தடுப்பு சிகிச்சை பராமரிப்பு திட்டங்களை வழங்குகிறது.

தொடர்ந்து காவேரி மருத்துவமனையின் முதுநிலை நீரிழிவு மருத்துவர் டாக்டர். ரி. பரணிதரன் பேசுகையில், “பெரும்பாலும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை தனித்தனி பிரச்னைகளாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் அவை அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து, அதாவது மோசமான வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலிருந்தே உருவாகின்றன” என்று கூறினார்.

‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’ முன்முயற்சியானது, இரத்த குளுக்கோஸ் பரிசோதனைகள், பாதப் பரிசோதனைகள், தைராய்டு பரிசோதனை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நீரிழிவு விழித்திரை பரிசோதனை, பல் பரிசோதனைகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை உள்ளிட்ட இலவச சுகாதார பரிசோதனை சேவைகள் இடம்பெற்றன.

காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “ நீரிழிவு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் எங்களின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமூகத் திட்டங்களில் டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்பு எங்களை ஊக்குவிக்கிறது” என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img