Homeபிற செய்திகள்வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை திருவண்ணாமலை கலெக்டர் நேரில் ஆய்வு

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை திருவண்ணாமலை கலெக்டர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று மாநகராட்சிக்குட்பட்ட வேங்கிக்கால் ஜெய்பீம் நகரில் நடைபெற்ற “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் -2025” பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை பிழையில்லாமல் சீரமைப்பதற்கும், தகுதியுடைய எந்த வாக்காளரும் விடுபடாதபடி உறுதிப்படுத்துவதற்கும், Special Intensive Revision (SIR) எனப்படும் இந்த சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் முக்கிய நோக்கம், இறந்த வாக்காளர்கள், முகவரி மாற்றம் காரணமாக வெளியூரில் வசிக்கும் வாக்காளர்கள், ஒரே நபரின் பெயர் பல முறை பதிவு செய்யப்பட்டிருப்பது போன்ற பிழைகளை நீக்கி, சுத்தமான மற்றும் துல்லி யமான வாக் காளர் பட்டியலை உருவாக்கு வதாகும். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணையின் படி, நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் (படிவம் 1 மற்றும் அதன் நகல்) வழங்கி விவரங்களைச் சேகரிப்பர்.

அதன் ஒரு பகுதியாக, நேற்றைய தினம் வேங்கிக்கால் ஜெய்பீம் நகரில் வீடு வீடாக படிவம் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளிடமிருந்து பணிநிலை விவரங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) தியாகராஜன், திருவண்ணாமலை வட்டாட்சியர் மோகன்ராமன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img