திமுக இளைஞரணி செயலாளர் – தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர திமுக இளைஞரணி சார்பில் 115க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கு பெறும் “உதயநிதி கோப்பை 2025 – 26” எனும் மாபெரும் கிரிக்கெட் போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் மீளவிட்டான் சாலையில் உள்ள பெரியசாமி திடலில் துவக்கி வைத்து உரையாற்றினார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி கண்ணன், மாநகர அயலகாணி அமைப்பாளர் கிரிஸ்டோபர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வின், சங்கரநாராயணன், பிரவீன் குமார், முகமது ஜெயலாப்தீன், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் ராஜா பெரியசாமி, ராஜா முனியசாமி, ராமச்சந்திரன், செந்தூர்பாண்டி, நிர்மல், மகளிர் அணியைச் சேர்ந்த கலாவதி, பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



