கோவை, ஆலாந் துறை அடுத்துள்ள மத்துவராயபுரம் சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்று (2ம் தேதி) வருடாந்திர ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்றது. இதில் பேராசிரியர் டாக்டர் எமர்சன் குடும்பத்தினர், விற்பனை விழாவை ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன் முன்னிலையில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
இதில் ஆயர் கருணாகரன், செயலர் டாக்டர் பிரின்ஸ் அருள்ராஜ், பொருளாளர் ஆனந் ஆசீர் போதகசேஸ்கர உறுப்பினர்கள் மற்றும் திருமண்டல குழு உறுப்பினர்கள் ஜெபசிங், ஞானப்பிரகாசம் உட்பட திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.



