fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சமுதாய நற்பணி மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சமுதாய நற்பணி மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி

கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வினாடி வினா நிகழ்ச்சியில் 312 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் சார்பில் கடந்த 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சமுதாய நற்பணி மன்றம் என்ற முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் அமைப்பு துவங்கப்பட்டது.

இந்த அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

30வது ஆண்டாக இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையேயான வினாடி வினா நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் 156 பள்ளிகளைச் சேர்ந்த 312 மாணவர்கள் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை துணைவேந்தர் (பொறுப்பு) மற்றும் பதிவாளர் இர.தமிழ் வேந்தன், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் சேலம் மண்டல துணை பொது மேலாளருமான செந்தில்குமார் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

சுமார் 71 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த அமைப்பின் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததோடு, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு
துணைவேந்தர் இர.தமிழ்வேந்தன் உள்ளிட்டவர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img