fbpx
Homeபிற செய்திகள்வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த முறை: கோவை கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்...

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த முறை: கோவை கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த முறை -2026 குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மாவட்ட அளவிலான அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களான மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மோ.ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் மருதுபிரியா (கோவை தெற்கு), ராமகிருஷ்ணன் (கோவை வடக்கு), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கீதா, மாநகராட்சி உதவி ஆணையாளர் குமரேசன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தனி வட்டாட்சியர் (தேர்தல்) தணிகைவேல், சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள், பலர் கலந்துகொண்டனர்.


இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முறை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 2002/2005ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல்களுடன் செய்யப்பட்ட வாக்காளர்கள் ஒப்பீட்டுப் பணி, வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமனங்கள், வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விவரம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்த விவரம், வாக்குச் சாவடிநிலை அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டவுள்ள விவரம் ஆகிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது.


மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாக்காளர்பட்டியல் தீவிர திருத்தமுறை குறித்தும், இம்முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகம் ஆகியோரால் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ள கணக்கெடுப்பு படிவம், அதில் கோரப்பட்டுள்ள விவரங்கள், அதனை பூர்த்தி செய்யும் முறை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு செல்ல உள்ள நாட்கள் குறித்த விவரங்கள், கணக்கெடுப்புப் படிவங்கள் திரும்பப் பெறப்படும் முறை, வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை கடந்த தீவிரத் திருத்த முறையின் போது 2002/ 2005ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் கண்டறியும் முறை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் முறை மற்றும் நாள், வாக்காளர்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபணைகள், வாக்காளர் பதிவு அலுவலரால் மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்களின் மீதான கூர்ந்தாய்வு நடைமுறைகள், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுதல் உள்ளிட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தமுறையின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.


அரசியல் கட்சிப் பிரதிநிதிகளால் இறந்த மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்படும் முறை, புதிதாக பெயர் சேர்க்கப்பட பின்பற்றப்படவுள்ள நடைமுறை, குடியுரிமையை மெய்ப்பிக்க இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள், சிறப்புத் தீவிரத் திருத்தமுறையின் போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படவுள்ள ஆவணங்களின் விவரங்கள் ஆகியவை குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.


மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் சார்பாக நியமனம் செய்யப்படும் வாக்குச்சாவடி முகவர்களை அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நியமனம் செய்திடவும், மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக களஆய்வு பணிக்கு வரும் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் போதிய ஒத்துழைப்பினை வழங்கிடவும், இப்பணியினை சிறப்பான முறையில் முடித்து தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களுடைய பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற தேவையான ஒத்துழைப்பினையும் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img