fbpx
Homeபிற செய்திகள்நர்சரிகளில் 3,60,000 மரக்கன்றுகள் உற்பத்தி: காரமடை அருகே நாற்றங்காலை ஆய்வு செய்த கோவை கலெக்டர் பவன்குமார்...

நர்சரிகளில் 3,60,000 மரக்கன்றுகள் உற்பத்தி: காரமடை அருகே நாற்றங்காலை ஆய்வு செய்த கோவை கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர்

கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம், சிக்காரம்பாளையம் ஊராட்சியில், அர்ச்சனா அவின்யூவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நாற்றங்கால் பண்ணையில், வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லிக்காய், மாங்கனி உள்ளிட்ட மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரவிந்திரன், உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இச்செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப் பனவர் கூறியதாவது: நாற்றங்கால் பண்ணைகளில், நாற்றுகள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதால், அவை ஆரோக்கியமாகவும், வளரப்படுகின்றன.

நாற்றங்கால் பண்ணை, இயற்கையான சூழலை பேணவும் உதவுகிறது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முடிகிறது. கோவை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில் உற்பத்தி செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 4 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 20000 மரக்கன்றுகள், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 30000 மரக்கன்றுகளும், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 30000 மரக்கன்றுகளும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 20000 மரக்கன்றுகளும், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 30000 மரக்கன்றுகளும், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 30000 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 60000 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 20000 மரக்கன்றுகளும், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 30000 மரக்கன்றுகளும், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 30000 மரக்கன்றுகளும், சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 30000 மரக்கன்றுகளும், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 30000 மரக்கன்றுகளும் என மொத்தம் 32 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 3,60,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றது.

அதன்படி காரமடை ஊராட்சி ஒன்றியம், சிக்காரம்பாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 20,0000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இம்மரக்கன்றுகள் 6 அடி உயரம் வரை வளர்க்கப்பட்டு, பின்னர் வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லிக்காய், மாங்கனி உள்ளிட்ட மரக்கன்றுகளை சாலையோரங்களில் நடுதல், ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடுதல், அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடுதல், கலைஞர் கனவு இல்லம் வீடுகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கல்வி நிறுவனங்களில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளுக்கு நடவு செய்ய பயன்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img