இந்தியாவில் சீட்டு நிதி வர்த்தகத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் ஸ்ரீராம் குழும நிறுவனங்களில் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி இறுதிச் சுற்றில், மூலத்துறை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் பி.ஸ்ரீதேவ் இடைநிலைப் பிரிவில் மூன்றாம் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ‘இடைநிலைப் பிரிவு (6-8 ஆம் வகுப்பு)’, ‘மேல்நிலைப் பிரிவு (9-12 வகுப்பு)’, ‘கல்லூரிப் பிரிவு’ என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை 1988-ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் மாநில அளவில் நடத்தி வருகிறது. இதில் நடப்பாண்டில் மொத்தம் 6049 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றன.
இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் (இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒருவர் வீதம் 12 மண்டலங்களைச் சேர்ந்த வெற்றியாளர்கள்) இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
இதில் மாநில அளவில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோரின் விவரம் வருமாறு:
இடைநிலைப் பிரிவு:
முதல் பரிசு – பா.வர்ஷா, ஷெம்ஃபோர்ட் ஃபியூச்சரிஸ்டிக் பள்ளி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்
இரண்டாம் பரிசு- த.தீ. தேவதீரன், ஸ்ரீ மகாதேவ குருஜி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குடவாசல், திருவாரூர் மாவட்டம்
மூன்றாம் பரிசு – பி.ஸ்ரீதேவ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மூலத்துறை, மேட்டுப்பாளையம், கோவை
மேல்நிலைப் பிரிவு:
முதல் பரிசு – பெ.த. சங்கமேஸ்வரன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்ககிரி, சேலம் மாவட்டம்.
இரண்டாம் பரிசு – தி. தீஷா, அரசு மாதிரிப் பள்ளி, கைக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம்.
மூன்றாம் பரிசு- ந. நந்தினி, அரசினர் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்.
கல்லூரிப் பிரிவு:
முதல் பரிசு – பு.சுசிமிதா, ஸ்ரீ சாரதா மகாவித்யாலயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்
இரண்டாம் பரிசு: மு.சந்தோஷ்குமார், கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி.
மூன்றாம் பரிசு: மு.மணிவாசகம், ஜெ.ஜெ. கல்வியியல் கல்லூரி, சிவபுரம், புதுக்கோட்டை மாவட்டம்.
முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ.15,000 ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ.10,000 ரொக்கமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 7,500 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.



