நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட மூத்த சிலம்ப ஆசான்கள் தொடங்கி வைத்தனர்.

இதில் மாவட்ட மூத்த சிலம்ப ஆசான்கள், சிலம்ப பயிற்சியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஒற்றைக்கம்பு இரட்டைக் கம்பு, சுருள்வாள், மான் கொம்பு இரட்டைக் கம்பு இரட்டை சுருள், புலி ஆட்டம், சிறுத்தா கம்பு, போர் சிலம்பம், அலங்கார சிலம்பம் உள்ளிட்ட சிலம்பக் கலைகளை நிகழ்த்திக் காட்டினர். தமிழர் பாரம்பரியமிக்க சிலம்ப விளையாட்டில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றும் சிலம்ப விளையாட்டு குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சியில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக, சிலம்ப விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த ஆசான்கள் மற்றும் சிலம்ப பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிலம்ப விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.



