fbpx
Homeபிற செய்திகள்‘டைனோசர் உலகம்’ காட்சி அமைப்புடன் மந்திர தீபாவளி ஒளிவிழா கொண்டாட்டம், கோவை ப்ரோஜோன் மாலில் தொடங்கியது

‘டைனோசர் உலகம்’ காட்சி அமைப்புடன் மந்திர தீபாவளி ஒளிவிழா கொண்டாட்டம், கோவை ப்ரோஜோன் மாலில் தொடங்கியது

கோவை புரோசோன் மாலில் விழாக்காலம் தொடக்கமாக “மந்திர தீபாவளி ஒளி விழா 2025” கொண்டாட்டம் நேற்று தொடங்கி உள்ளது. இது தொடர்ந்து 19 நாட்களுக்கு நடக்கிறது. திருவிழாவில், பரவசமூட்டும் நிகழ்ச்சிகள், அனைத்து வயது வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற சிறப்பு சலுகைகள் இடம் பெறு கின்றன.

முதல் முறையாக புரசோன் மால் முழுவதும் ஒளி விளக்குகளால் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு சொர்க்கமாக ஜொலிக்கிறது. கர்நாடகாவில் உள்ள மைசூர் தசரா பண்டிகை விழா அலங்கரிப் பாளர்கள் பங்கேற்று இதை காட்சிப்படுத்தியுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் நுழையும்போதே சொர்க்கத்திற்குள் நுழைந்த மகிழ்ச்சியை பெறுவதோடு என்றும் நீங்கா நினைவுகள் தரும் தீபாவளி சூழலை உணர முடியும். வாங்கி மகிழ்ந்து போட்டியில் பரிசுகளை வெல்லுங்கள்.

பொருட்களை வாங்கும் வாடிக் கையாளர்கள், வாசகம் எழுதும் போட்டியில் பங்கேற்று, 35 லட்சம் ருபாய் வரையிலான பரிசுகளை அள்ளலாம். கார், யெஜ்டி ரோட்ஸ்டெர் பைக், தங்கம், வீட்டு உபயோக பொருட் கள், விடுமுறைக்கு வெளிநாட்டு சுற்றுலா, வார இறுதி நாள் வியப்புகள், உடனடி பரிசுகள், இலவச ஷாப்பிங் வாய்ப்பு உள் ளிட்ட வாடிக்கையாளர்களை பர வசமடையச் செய்யும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

அனைவரையும் கவரும் வகை யில் புரோசோன் டைனோசர் உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மாபெரும் உள் ளரங்கு டைனோசர் உலகம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அசையும் டைனோசர்களை பார்க்கவும், விளையாட்டுக்களை காணவும், பல நேரடி செயல்முறைகளை செய்யவும் இது வாய்ப்பளிக்கிறது. சர்வதேச தரத்திலான இது போன்ற கவர்ச்சிகரமான நிகழ்வுகள் மத்திய கிழக்கு நாடு கள், ஐரோப்பிய நாடுகளில் மட் டுமே வாடிக்கையாளர்களை மகிழ்வித்தது.

தற்போது இங்குள்ள வாடிக் கையாளர்களும் கண்டு களித்து மகிழ்ச்சி அடையலாம். அக்டோபர் 18, 19 இருநாட்கள் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்ட ஷாப்பிங் நேரம், இலவச பார்க் கிங், புரோசோன் மாலில் உள்ள டைனோசர் பார்க்கிற்கு இலவச நுழைவு வசதிகள் செய்யப் படுகிறது.

மேலும் இதுகுறித்து புரோசோன் மையத்தின் தலைவர் அம் ரிக் பனேசர், செயல் இயக்க பிரிவு தலைவர் முசாம்மில், நிதி பிரிவு தலைவர் சிவக்குமார், தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஈஸ்வந்த் ராவ், சந்தை பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் ஆகியோர் கூறும்போது, “புரோசோன் மாலில் இந்த ஆண்டு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவில் நீங்காத அனுபவங்கள் கிடைக்கும்.

வண்ணமயமான விளக்குகள், மாபெரும் போட்டிகள், தனித்துவமிக்க பொழுதுபோக்கு நிகழ்வுகள் போன்றவைகளை உணர முடியும். இந்த மந்திர தீபாவளி ஒளிநாள் விழா 2025 கொண்டாட்டத்தில், ஒரு கோடி பேர் பங்கேற்பர் என எதிர்பார்க் கிறோம் “ என்று கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img