கோவை கொங்குநாடு மருத்துவமனை 375 படுக்கை வசதிகளுடன் கோவையின் மையப் பகுதியில் இயங்கி வருகின்றது. இந்த வருடம் உலக ரத்த கொதிப்பு தினத்தில் ஆரம்பித்து 75 நாட்களுக்குள் ஒரு லட்சம் நபர்களுக்கு ரத்தக்கொதிப்பு பரிசோதனை இலவசமாக செய்து சாதனை படைத்துள்ளது.
ஒரு லட்சம் நபர்களுக்கு மட்டும் எடுத்தது சாதனை அல்ல. இதனை இந்த ஒரு லட்சம் நபர்கள் பத்து மடங்கு பொதுமக்களுக்கு பரப்பி பத்து 10 லட்சம் நபர்களுக்கு மேல் ரத்த கொதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
இது உண்மையிலேயே நோபல் உலக சாதனையாக கொங்குநாடு மருத் துவமனையினை பாராட்டி, நோபல் உலக சாதனையாளர்கள், உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் நோபல் உலக சாதனை தலைமை செயல் அதிகாரி அரவிந்த் லட்சுமி நாராயணன், தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர்.லாவண்யா கலந்துகொண்டு கொங்குநாடு மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.
இதில் கொங்குநாடு மருத்துவம னையின் இருதய சிகிச்சை பிரிவு தலைவரும் தலைமை இருதய சிகிச்சைமருத்துவர் டாக்டர் பாலாஜி சுந்தரேசன் அவர்களும், இருதய அறுவை சிகிச்சை துறை தலைவரும் இருதய அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் மோகன கிருஷ்ணன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக இருதய தினத்தில் ரத்தக் கொதிப்பின் பாதிப்புகள் பற்றி சிறப்பாக விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.
இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜயகுமார், இருதய சிகிச்சை நிபுணர் டாக் டர் ஜெகதீஸ்வரி, சீனியர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார், தலைமை மயக்கவியல் மருத்துவர் டாக்டர் கணேஷ் பாபு, மயக்கவியல் மருத்துவர் டாக்டர் சபரி கிரி வாசன், மற்றும் செவிலியர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.



