fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் 3,60,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை - ஆட்சியர் பவன்குமார்

கோவை மாவட்டத்தில் 3,60,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை – ஆட்சியர் பவன்குமார்

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், வாரப்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நர்சரி பண்ணையில் வேம்பு, புளி, நாவல் ஆகிய செடிகள் உற்பத்தி செய்யும் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வுகளின் போது, சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சிவகாமி, தசிக் கந்தர்பாஷா, உதவி பொறி யாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இச்செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: நாற்றங்கால் பண்ணை என்பது பயிர்களின் நாற்றுகளை உற்பத்தி செய்து, நடவுக்குத் தயார்படுத்தும் இடமாகும்.

நாற்றங்கால் பண்ணையின் முக்கிய பயன்கள், ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்தல், நில பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் இடர் மேலாண்மையை எளிதாக்குதல் ஆகும்.

நாற்றங்கால் பண்ணைகளில், நாற்றுகள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதால், அவை ஆரோக்கியமாகவும், வளர்க்கப்படுகின்றன. நாற்றங்கால் பண்ணை, இயற்கையான சூழலை பேணவும் உதவுகிறது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முடிகிறது.

கோவை மாவட் டத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக் டோபர் மாதங்களுக்கு வட்டாரத்திற்கு மாதம் தலா 10,000 நாற்றுகள் உற்பத்தி செய்ய அறிவுரைகள் பெறப்பட்டது.

அதன்படி 24 நர்சரிகளில் 10,000 நாற் றுகள் வீதம் 2,40,000 நாற்றுகள் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் 3,60,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இம்மரக்கன்றுகள் 6 அடி உயரம் வரை வளர்க்கப்பட்டு, பின் 2026-27-ம் ஆண்டிற்கு நர்சரி பண்ணையில், வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லிக்காய், மாங்கனி ஆகிய பெருமளவு மரக்கன்றுகள் நடுதல், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல், ஆற்றங்கரையில் மரக் கன்றுகள் நடுதல், அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடுதல், கலைஞர் கனவு இல்லம் வீடுகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கல்வி நிறுவனங்களில் மரக்கன் றுகள் நடுதல் போன்ற பணிகளுக்கு நடவு செய்ய பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img