ராயல்கேர் மருத்துவமனை மற்றும் உயிரின் சுவாசம் அறக்கட்டளை சார்பில் செயற்கரிய செயல் தவமா? தானமா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். க.மாதேஸ் வரன் முன்னிலையில் பட்டிமன்றம் நடைபெற்றது. சொல்வேந்தர் சுகிசிவம் பட்டிமன்ற நடுவராக இருந்தார்.
இதில் தவமே என்ற தலைப்பில் நகைச்சுவை புலவர்.மா.இராமலிங்கம், ச.நீலகண்டன், ஆ. பிரிட்டோ ஆகியோர் பேசி னர். தானமே என்ற தலைப் பில் பர்வீன் சுல் தானா, கோவை சாந்தாமணி, க.சிவகுருநாதன் ஆகியோர் பேசினர். உடல் உறுப்பு தானம், அறுவைச் சிகிச்சை ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டிமன்றம் அமைந்தது. நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



