திருப்பத்தூர் ரித்வி மருத்துவம னையுடன் இணைந்து வேலூர் நறுவீ மருத்துவமனை நடத்திய மருத்துவ முகாம் திருப்பத்தூர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. பிரதி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
குடும்பத்தில் யாருக்கே னும் இதயம் சம்மந்தமான நோய் அறிகுறி, அதிக இரத்த அழுத்தம், முறை யற்ற இதய துடிப்பு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு திருப்பத்தூர் ரித்வி மருத் துவமனை இயக்குநர் டாக்டர் யோகானந்த் தங்க ராஜுடன் இணைந்து வேலூர் நறுவீ மருத்துவ மனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் விநாயக் சுக்லா. டாக்டர் ரே ஜார்ஜும், மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல் உள்ளவர்கள், சுவாசிக்க சிரமப்படுபவர்கள், நீடித்த சளி அல்லது கபம் வெளியேறுதல், இருமலுடன் இரத்தம் வருதல், உரக்கத்தில் சுவா சம் தடைபடும் நிலை உள்ளவர்களுக்கு நறுவீ மருத்துவமனை நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ் சிகிச்சை அளிக்க உள்ளனர். இதனை தொடர்ந்து தண்டுவடம் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.
சிகிச்சையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு வேலூர் நறுவீ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இம் மருத்துவ முகாம் தொடக்க விழா நேற்று திருப்பத்தூர் ரித்வி மருத்து வமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரித்வி மருத்து வமனை இயக்குநர் டாக்டர் யோகானந்த் தங்கராஜ், நறுவீ மருத்து வமனையின் டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ், டாக்டர் ரே ஜார்ஜ், தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் இராமன் என இரு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.



