தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கிளை நூலகம் இயங்கி வந்தது. போதிய இடவசதி இல்லை எனவும் புதிய கட்டிடம் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகஅரசு சார்பில் அரசாணை பிறப் பிக்கப்பட்டு கழுகுமலையில் ரூ.22 லட்சம் மதிப்பில் துணை நூலகம் அருகே இணைப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது.
சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கழுகுமலை பேரூராட்சி தலைவர் அருணா சுப்பிரமணியன் குத்து விளக்கேற்றினார். பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியன், நூலகர் பாலாஜி, எட்டயபுரம் நூலகர் சுமதி, முன்னாள் ஆசிரியர் கருப்பசாமி, திமுக பேரூர் கிளை திமுக செயலாளர் கிருஷ் ணகுமார், ஒன்றிய துணை செயலாளர் ஜெய்சங்கர், பெரிய ராஜா, காளிதாஸ், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



