fbpx
Homeபிற செய்திகள்பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் நடத்திய கண்காணிப்பு வாரவிழா: கிராமங்கள், புறநகர்ப் பகுதிகளில்...

பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் நடத்திய கண்காணிப்பு வாரவிழா: கிராமங்கள், புறநகர்ப் பகுதிகளில் விழிப்புணர்வு

பேங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் மண்டலத்திற்கு உள்பட்ட பல்வேறு கிராமப்புற மற்றும் புறநகர் கிளைகளின் சார்பில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் செப்டம்பர் 15 மற்றும் 24ம் தேதிகளில் கண்காணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மத்திய கண்காணிப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காணிப்பு வாரம் -2025ன் (ஆகஸ்ட் 18 தொடங்கி நவம்பர் 15 வரை) ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


இதில் வங்கியின் கோவை மண்டல மேலாளார் ரஞ்சித் குமார், துணை மண்டல மேலாளர் ஏ.சிவ சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில், கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வங்கி கிளைகள் மூலம் அவர்களின் எல்லைக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்தி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


நெறிமுறைகளின் தேவைகள், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நிர்வாகம், ஊழலின் தாக்கம் அது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு எவ்வகையில் தடையாக உள்ளது என்பது குறித்தும் புகார் இணைய தளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன.


இதில் பங்கேற்ற அனைத்துத் தரப்பு மக்களும் சட்டத்தின்வழி நடப்பதற்கும் லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டோம் என உறுதிமொழி ஏற்றதுடன் கடமைகளை ஒளிவுமறைவற்ற தன்மை மற்றும் நேர்மையுடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணிகளை மேற்கொள்வது மற்றும் கண்ணில்படும் ஊழல் நிகழ்வுகளை தொடர்புடைய அமைப்புகளிடம் தெரிவிப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img