fbpx
Homeபிற செய்திகள்கல்லூரி மாணாக்கர்களுக்கு திறன் பயிற்சி

கல்லூரி மாணாக்கர்களுக்கு திறன் பயிற்சி

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் காடையூர் அருகே உள்ள பிஎஸ்ஜி பொன்னம்மாள் நர்சிங் கல்லூரியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், ““CRAFT YOUR CAREER” என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தங்கள் தகுதி மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி கடந்த 20ம் தேதி அளிக்கபட்டது.

இதில் நேர மேலாண்மை, இலக்குகள் அடைய செய்ய வேண்டிய வழிமுறைகள், வேலை வாய்ப்புக்கான தகுதிகள் மற்றும் நேர்மறை சிந்தனைகள் குறித்து பயிற்றுநர் மற்றும் நந்தா பொறியியல் கல்லூரி துணைப்பேராசிரியர் லோகமூர்த்தியால் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கல்லூரியின் முதல்வர் பிரேமலதா, சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img