கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 645 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 3,976 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியே 64 லட்சம் மதிப்பில் வங்கி கடனுதவி மற்றும் 506 நபர்களுக்கு சுய உதவிக் குழு உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்) ஆகியோர் வழங்கினர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் சார்பாக, 645 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 3,976 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியே 64 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), தே.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பி.பெரியசாமி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமபுறம்/நகர்ப்புறங்களில் உள்ள ஏழ்மை நிலையில் மக்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பல்வேறு பணிகளை செய்து வருகின்றது.
மாநில வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக ஊரக பகுதிகளில் 7,351 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 79,601 உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1,960 குழுக்களில் 22,540 உறுப்பினர்கள் என ஊரக/நகர்ப்புற பகுதிகளில் மொத்தம் 9,311 குழுக்களில் 1,02,141 உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளது.
2025&-26 ஆம் நிதியாண்டில் ஊரகப் பகுதிகளில் 250 குழுக்களில் 3,392 உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 188 குழுக்களில் 2,162 உறுப்பினர்கள் என ஊரக/நகர்ப்புற பகுதிகளில் மொத்தம் 438 குழுக்களில் 5,554 உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர், சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி காணொளிக் காட்சி வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இனைத்தொடர்ந்து, நேற்று 140 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 2030 பயனாளிகளுக்கு ரூ.19.23 கோடி மதிப்பில் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிகடனுதவியும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 25 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 235 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் வங்கி பெருங்கடனுதவி, 385 குழுக்களைச் சேர்ந்த 770 பயனாளிகளுக்கு ரூ.2.96 கோடி மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதி, 34 குழுக்களைச் சேர்ந்த 34 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சம் மதிப்பில் வட்டார வணிக வள மைய கடனுதவி, 75 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் தனிநபர் தொழில் கடனுதவி, 61 குழுக்களைச் சேர்ந்த 832 பயனாளிகளுக்கு ரூ.8.80 கோடி மதிப்பில் சுயவேலைவாய்ப்புத் திட்டம் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிகடன் என மொத்தம் 645 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 3,976 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியே 64 லட்சம் மதிப்பில் வங்கி கடனுதவி மற்றும் 506 நபர்களுக்கு சுய உதவிக் குழு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் ரமேஷ், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.சௌ.கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் கணேசன், ராஜூவ் காந்தி, சசிதரன், ஜெயக்கொடி, சங்கீதா, ஆறுமுகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.



