fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி சுகாதாரப் பணியாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கிய அறக்கட்டளை

ஊட்டி சுகாதாரப் பணியாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கிய அறக்கட்டளை

டாக்டர் பி.சி.தாமஸ் அறக்கட்டளை சார்பில் ஊட்டி மாநகரப் பகுதிகளின் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரெயின் கோட்டுகள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது.

அடிக்கடி மழையும் குளிர்ச்சியும் நிலவும் ஊட்டி மற்றும் நீலகிரி மாவட்டங்களில், சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரெயின் கோட்டுகள் மற்றும் கையுறைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ரெயின் கோட்டுகள் மற்றும் கையுறைகளை பணியாளர்களுக்கு டாக்டர் பி.சி.தாமஸ் அறக்கட்டளையின் நிர்வாகிகளான டாக்டர் அசோக் பிரசாத் மற்றும் டாக்டர் உதிதா பிரசாத் ஆகியோரால், மாநகராட்சி ஆணையர் கணேசனிடம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாநகர சுகாதார அலுவலர் மருத்துவர் ஷிபி மற்றும் சுகாதார ஆய்வாளர் வைரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள், தேவையுள்ளவர்களுக்கு உதவும் நோக்கிலான எந்தத் திட்டங்களுக்கும் தங்களின் ஆதரவை வழங்குவதாகவும் உறுதி அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img