fbpx
Homeபிற செய்திகள்தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு

தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷனின் 34வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குத் தலைவர் ஜெ.செல்வன் தலைமை தாங்கி விருந்தினர்களையும் உறுப் பினர்களையும் வரவேற்றார். கௌரவச் செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையை வாசித்து,
கடந்த ஆண்டில் SISPA மேற்கொண்ட முக்கிய நடவ டிக்கைகள் மற்றும் தொழில் சார்ந்த மத்திய மாநில அரசிடம் வைக்கப்பட்ட கோரிக் கைகள் குறித்து விரிவாக எடுத்து ரைத்தார்.


தொடர்ந்து 2025-2027க்கான புதிய நிர்வாகிகளின் விவரம் வெளியிடப்பட்டது. இதில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சண்முகப்பிரியா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் அருண் கார்த்திக் 2025 – 2027 காலத்திற்கான SISPA தலைவராக ஒருமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
மேலும் துணைத் தலைவர்கள் வெங்க டேசன், கிரிராஜன், பிரதீப், கௌரவச் செயலாளர் ஜெகதீஷ் சந்திரன், இணைச் செயலாளர் வெங்கட சுப்பிரமணியன், கௌரவப் பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
இதில், நடைபெற்ற பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: பஞ்சின் மீதான இறக்குமதி வரியை 31.12.2025 வரை விலக்கு அளித்த மத்திய நிதியமைச்சருக்கு இந்த பொதுக் குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், இந்த வரி விலக்கை 31.03.2026 வரை நீட்டிக்க மத்திய அரசை இந்த பொதுக் குழுக் கூட்டம் வேண்டிக் கேட் டுக்கொள்கிறது.


மத்திய அரசாங்கம் ஜிஎஸ்டி Slab-களை நான்கிலிருந்து இரண் டாகக் குறைத்து, வருகின்ற 22.09.2025 முதல் 5% மற்றும் 18% விகிதங்களாக மட்டுமே வசூலிக்கப்படுவதையும் மற்றும் செயற்கை இழை நூல்களின் ஜிஎஸ்டி விகிதம் 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதையும் இந்த பொதுக்குழு வரவேற்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2022 முதல் மின் கட்டணம் (Energy Charges), அதிகபட்ச தேவை கட்டணம் (Maximum Demand Charges), உச்சநேரக் கட்டணம் (Peak Hour Charges), நிலை கட்டணம் (Fixed Charges) போன்ற நேரடி மற்றும் மறைமுக கட் டணங்களை வருடா வருடம் உயர்த்தி வருகிறது.


தமிழ்நாட்டில் உள்ள தொழிற் சாலைகள் எதிர் கொள்ளும் கடுமையான நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மற்றும் மின்சார வாரியம் இணைந்து உயர்த்தப்படும் அனைத்து கட்டணங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இப்பேரவை கூட்டம் கேட்டுக் கொள்கிறது. பொதுக்குழுக் கூட்டத்திற்கு SIMA-வின் முன்னாள் தலைவர் எஸ்.கே.சுந்தரராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவரது முன்னிலையில், SISPA-வின் முன்னாள் தலைவர் கள் துரைசாமி நாயுடு மற்றும் யு.ஜி கனகராஜ் ஆகியோருக்கு Visionaries of SISPA விருது வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img