fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கலைக் கல்லூரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு: கோவை மண்டல அளவிலான மாணவ, மாணவிகளுக்கான பளுதூக்கும்...

கேபிஆர் கலைக் கல்லூரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு: கோவை மண்டல அளவிலான மாணவ, மாணவிகளுக்கான பளுதூக்கும் போட்டி

கோவை மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பளுதூக்கும் போட்டி கடந்த 09 மற்றும் 10ம் தேதி கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் டாக்டர் கே. பி. ராமசாமி கலந்து கொண்டு, மாணவர்கள் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. கீதா பேசுகையில், “பெற்றோர்களின் ஊக்குவித்தலே உங்களைப் போன்ற மாணவர்களின் ஆர்வத்திற்குக் காரணமாக அமைகிறது. உடல்நலம் மற்றும் மனநலம் மேம்படவும்
இந்தப்போட்டிகள் வழிவகை செய்கின்றன” என்று கூறினார்.

இதில் புத்துணர்ச்சி மற்றும் விளையாட்டு மேலாண்மைத் துறையைச் சேர்ந்த அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி மற்றும் தமிழ்நாடு பளு தூக்கும் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் பி.வடிவேலு ஆகி யோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.

இப்போட்டிகளில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டியினைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் தமிழரசி ஒருங்கிணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img